பிரித்தானியாவில் இருந்து புலம்பெயர்ந்தோரை கடத்த முயன்ற சாரதி!

பிரித்தானியாவில் இருந்து புலம்பெயர்ந்தோர் பலரை லொரி டிரைவர் ஒருவர் கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்தோர் பலர் தங்கள் சொந்த நாடுகளை விட்டு வருகின்றனர். அதன் பின் இங்கிருக்கும் சூழ்நிலையில், வாழ முடியாமலும், பல்வேறு காரணங்களினாலும் அவர்கள் மீண்டும் தங்கள் சொந்த நாட்டிற்கோ அல்லது வேறொரு நாட்டிற்கு செல்ல முயற்சிக்கின்றனர்.

அந்த வகையில், கடந்த 21-ஆம் திகதி துருக்கியைச் சேர்ந்த Hakan Zengin(36) என்ற டிரவைர் லொரியில் சுமை பொருட்களை வைத்து வந்துள்ளார்.

அப்போது அவர் Surrey-வில் இருக்கும் A3 உடன் M25 சாலை சந்திப்பில் பொலிசாரால் வழக்கமான சோதனைக்கு தடுத்து நிறுத்தப்படுகிறார்.

பொலிசார் மேற்கொண்ட சோதனையில் புலம்பெயர்ந்தோர் பலர் லொரியின் டிரெய்லரில் மறைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் மிகவும் வசதியாக அமர்வதற்கு மேலே சுமைகள் போடப்பட்டு, அதன் கீழே குறுக்கே பலகைகள் போடப்பட்டிருந்தது.

இதையடுத்து புலம்பெயர்ந்தோர் அனைவரும் குடிவரவு குற்றங்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, கடந்த செவ்வாய் கிழமை விம்பிள்டன் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அங்கு ஏப்ரல் மாதம் கிங்ஸ்டன் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை அவர்கள் காவலில் இருக்கும் படி உத்தரவிடப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து, தேசிய குற்றவியல் அமைப்பின் (NCA) செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், பிரித்தானியாவில் இருந்து குடியேறுபவர்களை கடத்துவது நீங்கள் நினைப்பதை விட பொதுவானதாக உள்ளது.

இந்த கடத்தல் இரு வழிகளில் நடக்கிறது. இது போன்ற புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவை விட்டு வெளியேற பல காரணங்கள் உள்ளன.

சிலர் கடுமையான குற்றத்தின் காரணமாக இங்கிருந்து வெளியேற நினைக்கின்றனர். இதனால் சிலர் நாடுகடத்தலுக்கு ஆளாகிறார்கள்.

ஆனால், அதே சமயம் அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படுவதை விரும்புவதில்லை. அவர்கள் ஐரோப்பாவில் இருக்கும் வேறொரு நாடுகளுக்கு தப்பி ஓடுகின்றனர்.

சிலர் சட்டவிரோதமாக பிரித்தானியாவில் தங்கியுள்ளனர். அவர்களிடம் சரியான பயண ஆவணங்கள் இருக்காது, இது போன்ற சூழ்நிலையில், அவர்கள் லொரியில் சென்றால், அவர்களுக்கு முறையான பயண ஆவணங்கள் தேவைப்படாது, இதுவே முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!