மாகாணசபை தேர்தலை நடத்தாமை மக்கள் உரிமையை மீறும் நடவடிக்கை: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு!

13 ஆவது திருத்தத்தின்படி மாகாணசனை தேர்தல் நடத்தப்படாமை ஆனது, வாக்காளர்களின் உரிமைகளை மீறும் செயற்பாடாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபை தேர்தல் உடன் நடவடித்தப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம். 13 ஆவது திருத்தம் ஊடாக மக்கள் பிரதிநிதிகளை கொண்ட நிர்வாகத்தை உருவாக்குவதற்கே மாகாணசபைகள் கொண்டுவரப்பட்டன. அத்தகைய நிறுவனமானது தொடர்ந்தும் ஜனாதிபதியின் பிரதிநிதியின் தலைமையில் செயற்ப்பட்டு வருவது மக்களின் உரிமையை இல்லாது செய்யும் நடவடிக்கையாகும். ஆகவே மாகாண சபை தேர்தலை நடத்துமாறு நாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றோம்.

தேர்தலை முறைமை குறித்து இதுவரை நிலையான தீர்மானம் எடுக்க்படவில்லை. ஆனாலும் அரசாங்கத்திற்கு இது சவாலான ஒரு விடயம் அல்ல. எந்த அடிப்படையில தேர்தலை நடாத்துவது மற்றும் எந்த முறையில தேர்தலை நடத்துவது என்பது குறித்து அரசாங்கம் யோசனைகளை முன்வைக்க முடியும். நாடாளுமன்றத்தில் இதனை முன்ரைவக்கும் போது எதிர்க்கட்சிகளும் தனது தீர்மானத்தை முன்வைக்க முடியும். புதிய யோசனை வரும் என தெரிவிக்கப்பட்டாலும் அதற்கான எந்த கருத்துக்களும் பேசப்படவில்லை. எனவே தேர்தலை தாமதப்படுத்த வேண்டாம் அது வாக்காளர்களின் உரிமைகளை மீறும் நடவடிக்கையாகும். ஆகவே மாகாணசபை தேர்தல் உடன் நடத்தப்படவேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!