அனுமதி அளிக்கப்படாத ஆறு இலட்சம் சீன தடுப்பூசிகள் இன்று கொழும்பு வருகின்றன!

சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு கிடைக்கவுள்ளன. சீன அரசாங்கத்தினால், நன்கொடையாக 6 இலட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. நாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ள தடுப்பூசிகளை முதலில் இங்கு வசிக்கும் சீனப் பிரஜைகளுக்கு ஏற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கையில் தொழிலுக்காக வருகை தந்துள்ள 4,500 சீனப் பிரஜைகளுக்கு முதற்கட்ட சினோபார்ம் தடுப்பூசிகளை ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர், சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

எவ்வாறாயினும் சினோபார்ம் தடுப்பூசியை நாட்டில் பயன்படுத்துவதற்கு அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

ஆவணங்களில் காணப்படும் குறைபாடுகளால் இதுவரை சீனாவின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த அவர், அனுமதி கிடைத்தவுடன் எஞ்சியுள்ள சினோபார்ம்தடுப்பூசிகளை நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!