ஜெனிவாவுக்குள் முடங்கியிருக்கும் வரை பழிவாங்கல் தொடரும்!

அரசியல் நோக்கத்துடனேயே தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா தொடர்பான விவகாரங்கள் முடக்கப்பட்டு கொண்டிருக்கும் வரையில் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!