பொலிஸ் உத்தியோகத்தர் தாக்குதல் விவகாரம் அரசாங்கத்தின் தவறு அல்ல -உதய கம்மன்பில!

பொலிஸாரின் தாக்குதல் போன்ற விடயங்கள் மனிதவுரிமை என்ற ரீதியில் ஜெனீவா பிரேரணையில் தாக்கம் செலுத்தாது என அமைச்சரவை இணை ஊடகப்பேச்சாளர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடகசந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உங்களுக்கு ஞாபகம் இருக்கும் அமெரிக்காவில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கருப்பினத்தவர் ஒருவரை கழுத்து நெறித்து கொலை செய்தார். உலகலாவிய ரீதியில் பொலிஸ் அதிகாரிகளினால் இவ்வாறான சம்பவஙகள் இடம்பெறுகின்றன. அது அரசாங்கத்தின் தவறு அல்ல. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதானது அரசாங்கத்தின் பெரும் தவறாகும்.

ஜெனீவா யோசனை இவைகளினால் ஏற்படவில்லை. மேற்கத்தைய நாடுகளுக்கு அடிப்பணியாது நாம் செயற்படுவதனாலேயே இவ்வாறு அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து வருகின்றனர். தற்போது அவர்களினால் முன்வைக்க்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நாம் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளோம். இதனை நியாயப்படுத்துவதற்காக முன்வைக்கப்படும் காரணிகளை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!