வடக்கு, கிழக்கு கடலில் இந்திய மீனவர்கள் சட்டரீதியாக மீன்பிடிக்க அனுமதி! – டக்ளஸ் மீண்டும் யோசனை.

சட்டரீதியான முறைகளில் வடக்கு – கிழக்கு கடலில் மீன்பிடிக்க இந்திய மீனவர்கள் அனுமதிக்கப்படுவர் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதற்கான ஆலோசனை தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை இராஜதந்திர ரீதியாக தீர்த்துக் கொள்ளும் நோக்கில் இந்த ஆலோசனையை செயற்படுத்த முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மாத்திரம் இந்திய மீனவர்கள் சட்டரீதியான அனுமதிக்கப்பட்ட முறைமைகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!