ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்படுமா இல்லையா- தீர்மானம் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவின் மீதான தீர்மானம் எதிர்வரும் 5 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனது நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் ரிட் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்பது குறித்த தீர்மானம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நேற்று வழங்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த மனு மீதான தீர்மானம் இதுவரை தயாரிக்கப்படவில்லை என நீதிபதிகள் குழாம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவின் மீதான தீர்மானம் எதிர்வரும் 5 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!