ஒற்றையாட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்த விடமாட்டோம்!

ஒற்றையாட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பலவீனப்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒற்றையாட்சி முறைமையின் கீழான அம்சங்களை பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றி கொள்ள அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது. அரசாங்கத்தின் இலக்கை திசை திருப்ப பல குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றன.

ஜெனீவா விவகாரம் அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக காணப்பட்டது. சர்வதேசத்தில் மண்டியிடாமல் இராணுவத்தினரை அரசாங்கம் பாதுகாத்துள்ளது.

ஜெனீவா விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை வெற்றிக்கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோனதை அரசாங்கத்தின் சூழ்ச்சியென எதிர்தரப்பினர், பராளுமன்றில் முறையற்ற வகையில் செயற்பட்டார்கள். ரஞ்சனின் வெற்றிடத்துக்கு ஒருவர் தெரிவு செய்யப்பட்டதும் எதிர்க்கட்சியினர் அமைதியடைந்து விட்டார்கள்.

அரசாங்கத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்க சிறை செல்லவில்லை. நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காகவே அவர் சிறை சென்றுள்ளார் என்பதை எதிர்த்தரப்பினர் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆகையால், அவரது விவகாரத்துக்கு அரசியல் ரீதியில் இனியொருபோதும் தீர்வு காண முடியாது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!