அதிகரிக்கும் கொரோனா: ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளை தொற்று பாதிப்புக்கு ஏற்றபடி மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 1.5 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

காணொலி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில், கொரோனா பரவல் விகிதம் குறித்தும், அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் பங்கேற்க உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!