சீன ஜனாதிபதியிடம் நியமனச் சான்றிதழை கையளித்தால் இலங்கை தூதுவர்!

சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹன்ன சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம் தனது நியமனம் தொடர்பான சான்றுகளைக் கையளித்துள்ளார். ஜனாதிபதி ஜி ஜின்பிங் 29 நாடுகளின் சீனாவுக்கான புதிய தூதுவர்களின் நியமனச் சான்றிதழ்களை நேற்று பெய்ஜிங்கில் உள்ள மக்கள் அரங்கில் வைத்துப் பெற்றுக்கொண்டார்.

ஆப்கானிஸ்தான், கிரீஸ்,பொஸ்னியா, மடகாஸ்கர், இத்தாலி, திமோர், சூடான், மொரீஷியஸ், நேபாளம், பாகிஸ்தான், மால்டோவா, டென்மார்க், பெல்ஜியம், ஓமான், தஜிகிஸ்தான், ஐக்கிய இராச்சியம், வெனிசுலா, ஜப்பான் தென்னாப்பிரிக்கா, இலங்கை, பெலாரஸ், அயர்லாந்து, இஸ்ரேல்,கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு, ஈராக் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளின் சீனாவுக்கான தூதுவர்களே தமது சான்றிதழ்களைக் கையளித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!