இரசாயணம் அடங்கிய தேங்காய் எண்ணெய் தற்போது விற்பனையில் இல்லை – லசந்த அலகியவண்ண

நுகர்வோர் பாவணைக்கு பொருத்தமற்ற இரசாயணம் அடங்கிய தேங்காய் எண்ணெய் தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படவில்லை என்பது விசாரணைகள் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்

எவ்வாறாயினும் தேங்கேய் எண்ணெயில் இரசாயணங்கள் உள்ளடங்கியுள்ளதா என்பதனை கண்டறிவதற்கான சோதனை நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புற்று நோயினை ஏற்படுத்தக்கூடிய எண்ணெய்களை நாட்டிற்கு இறக்குமதி செய்யும் நடவடிக்கைபல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை , தேங்காய் எண்ணெய் மோசடி விடயத்தில் தவறு இழைத்தவர்களுக்கு எதிராகவும் தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான இரசாயணம் அடங்கிய 6 தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் இதுவரை மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண் மேலும்தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!