படையினரிற்கு மேலதிக உணவை வழங்கிய அதிகாரிக்கு மரணதண்டனை

தனது கட்டுப்பாட்டில் உள்ள படையினருக்கு மேலதிக உணவு மற்றும் எரிபொருளை வழங்கிய வடகொரிய இராணுவஅதிகாரி வடகொரிய ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் சுட்டுக்;கொல்லப்பட்டுள்ளார்.

இராணுவத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒன்பது பேர் கொண்ட குழுவொன்றினால் குறிப்பிட்ட இராணுவ அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார்,90 துப்பாக்கி ரவைகள் அவரின் உடலை துளைத்தன என சன் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹைன் சூ சொங் என்ற அதிகாரியே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அதிகாரத்தை அவமரியாதை செய்தது,எதிரிக்கு உதவியது மற்றும் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகளை வடகொரிய ஜனாதிபதி இவர் மீது சுமத்தியுள்ளார்.

வடகொரியாவின் செய்மதி நிலையத்தில் பணியாற்றுபவர்களுக்கு மேலதிக உணவு மற்றும் எரிபொருளை வழங்கியதே அந்த அதிகாரிசெய்த குற்றம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகொரியா ஜனாதிபதியின் அணுவாயுத திட்டங்களை பின்பற்றாததால் படையினருக்கு மேலதிக உணவுகளையும் எரிபொருளையும் அனுப்புமாறு அந்த அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

நாங்கள் ரொக்கட்கள் மற்றும் ஆயுதங்களை செய்வதற்காக இனிமேலும் பட்டினி கிடக்கவேண்டியதில்லை என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் அவர் படையினருக்கும் குடும்பத்தினருக்கும் மேலதிக உணவு மற்றும் எரிபொருளை அனுப்பியுள்ளார்

எனினும் வடகொரிய ஜனாதிபதி இதனை தனது அதிகாரத்தை மீறும் செயலாக கருதியுள்ளார் இதனை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என உத்தரவிட்டு கிம் அந்த அதிகாரிக்கு மரணதண்டனை வழங்கியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!