யார் சிறந்த அரசியல்வாதி? – டாக்டர் தமிழிசையின் சவாலை ஏற்ற அன்புமணி

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கும், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணிக்கும் இடையே ‘டுவிட்டர்’ தளத்தில் கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது. அப்போது டாக்டர் அன்புமணியை கடுமையாக விமர்சித்தார். இதை கண்டித்து பா.ம.க. வினர் சென்னையில் பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இன்று அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

நான் அன்புமணியை போல் தந்தையின் நிழலில் பதவியை பெறவில்லை. எனது அறிவு, திறமை, உழைப்பை கொண்டுதான் மாநில தலைவர் பதவிக்கு வந்து இருக்கிறேன். யார் அறிவாளி? யார் சிறந்த அரசியல்வாதி? என்பதை தெரிந்து கொள்ள என்னுடன் விவாதம் நடத்த அன்புமணி தயாரா? என்று சவால் விட்டு இருந்தார். இதுபற்றி டாக்டர் அன்புமணி கூறியதாவது:-

30 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டத்தில் 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக ஒரு சமுதாயத்தை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கொச்சைப்படுத்தி இருக்கிறார். அவரை கண்டித்து இன்று தொடர் முழக்க போராட்டம் நடக்கிறது. நாளைக்கு (29-ந்தேதி) பிறகு எங்கு வேண்டுமானாலும் தமிழிசையுடன் விவாதம் நடத்த தயார். இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!