இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பம்

கொரோனா தடுப்பூசி ஏற்றும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இரண்டாம் கட்ட தடுப்பூசி செயற்றிட்டத்தில் முதலாவதாக சுகாதார தரப்பினருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர், டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய்கள் தொடர்பிலான ஆலோசனைக்குழு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையில் நேற்று (19) கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

சுகாதார அமைச்சிடம் தற்போது சுமார் மூன்றரை இலட்சம் அஸ்ட்ரா செனெக்கா கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர், டொக்டர் சுதத் சமரவீர இதன்போது தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!