பூண்டு உட்பட சில உணவுப் பொருட்கள் சாப்பிடக்கூடாது: – மேகன் மெர்க்கலுக்கு உணவில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல் இனி பூண்டு உட்பட சில உணவுப் பொருட்களை சாப்பிட முடியாது. ராஜ குடும்பத்தின் உறுப்பினராக மாறிய ஒருவர் பல கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்னும் முறையில் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கலின் உணவுப் பழக்கங்களிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் ஒன்று பொது இடங்களில் உண்ணும் உணவில் பூண்டு சேர்த்துக் கொள்ளக் கூடாது. பொது நிகழ்ச்சிகளிலோ, ராஜ விருந்துகளிலோ அல்லது வெளி நாடுகளிலோ உணவு உண்ணும்போது உணவில் பூண்டு சேர்த்துக் கொண்டால் பேசும்போது பூண்டின் வாசனை வீசலாம் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இனி மேகன் அடிக்கடி வெளிநாடு செல்வதற்கும் கடல் உணவு உண்ணுவதற்கும்கூட இனி அனுமதி இல்லை. வெளிநாட்டுப் பயணத்தின்போது வயிற்று உபாதைகள் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மகாராணியார் பூண்டை வெறுப்பவர் என்பதும், அவரது உணவு எதிலுமே பூண்டு சேர்க்கப்படுவதில்லை என்பது உபரித் தகவல். ஆனால் மேகனின் விருப்ப உணவான Filipino-style chicken adoboவில் பூண்டு ஒரு முக்கிய பொருளாகும்.இவ்வளவு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், மேகன் தனியாக சாப்பிடும்போது பூண்டு சேர்த்த உணவை உண்ணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!