சீனாவிடம் மகிந்த பெற்ற தேர்தல் நிதி ஐக்கிய அரபு எமிரேட்சில் – திலக் மாரப்பன விசாரணை

கடந்த அதிபர் தேர்தலின் போது சீனாவிடம் இருந்து பெறப்பட்ட நிதியை, மகிந்த ராஜபக்ச ஐக்கிய அரபு எமிரேட்சில் வைப்பில் இட்டுள்ளாரா என்று, அந்த நாட்டு அரசாங்கத்திடம் சிறிலங்கா அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்திடம், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று அதிகாரபூர்வமாக விசாரித்துள்ளார் என்று, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தகவல் வெளியிட்டுள்ளார்.

“நம்பகமான தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த விவகாரத்தை சிறிலங்கா எழுப்பியுள்ளது.

ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக்கு சீனாவிடம் இருந்து 7.6 மில்லியன் டொலர் கிடைத்ததாக நியூயோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டதன் பின்னர், ஐக்கிய அரபு எமிரேட்சில் அந்தப் பணம் வைப்பிலிடப்பட்டது பற்றிய தகவல் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!