இலங்கை-சீன நாடாளுமன்ற நட்புறவு சங்க தலைவராக நாமல்..!

இலங்கை-சீன நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் சங்கத்தின் கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை-சீன நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சங்கத்தின் உபதலைவர்களாக வைத்திய கலாநிதி உபுல் கலப்பதி, அரவிந்த குமார் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும், உதவிச் செயலாளராக மொஹமட் முஸம்மில் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இலங்கையின் அந்நியச் செலாவணியைப் பாதுகாப்பதற்குக் கிடைத்துள்ள முதன்மையான ஆதாரமாக சீனா காணப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை-சீன நாடாளுமன்ற நட்புறவு சங்க கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையில் கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சீன அரசாங்கம் பெற்றுக்கொடுத்த ஒத்துழைப்புக்களைப் சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த கூட்டத்தில் உரையாற்றிய சீனத் தூதுவர், இலங்கை-சீன நட்புறவு சங்கத்தை மீண்டும் ஸ்தாபித்தமைக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு மேலும் ஆதரவை வழங்க சீனா தயாராக இருப்பதாகவும் சீனத் தூதுவர் இதன்போது கூறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!