மேதினம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்க முயற்சி!

திட்டமிட்டபடி மக்கள் விடுதலை முன்னணியின் மேதினக் கூட்டம் நடைபெறும் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரன் தெரிவித்தார் . யாழ் மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிடடுள்ளார்.

மே தினத்தை கொண்டாடுவதற்கான சகல ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றோம். எனினும் இந்த அரசாங்கமானது எமது மே தின நிகழ்வுகளை தடை செய்வதற்கு பல்வேறு விதத்திலும் முயன்று வருகின்றது. மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக எந்தத் தடை வந்தாலும் கொழும்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் எமது மே தினத்தை நடத்துவோம் என உறுதி கொண்டு உள்ளோம் என தெரிவித்தார்.

மே மாதம் என்பது ஒரு விசேட ஒரு மாதமாகும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் மேதின நிகழ்வு இடம்பெறும் மாதமாகும். முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான இறந்த உயிர்களை மக்கள் நினைவு கூரும் நாள்.

எனினும் இந்த அரசாங்கமானது தற்போது கொரோனா என்ற ஒரு மாயையை உருவாக்கி, மே தினம் மற்றும் முள்ளிவாய்க்கால் தினத்தை தடுப்பதற்காகவே இந்த கொரோனா என்ற குழப்பத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்கிறது.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்கள் என்பவர்கள் வேறுநாட்டு மக்களில்லை. எதிரி நாட்டு பிள்ளைகள் இல்லை. எங்களது சகோதரர்கள். இவர்களை நினைவு கூர்வதற்கு அந்த மக்களுக்கு உரிமை இருக்கின்றது. அந்த உரிமையை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்து வருகின்றது. மக்கள் விடுதலை முன்னணி வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது.

முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் எதற்காகப் போராடினார்கள் என்பதல்ல. பிரச்சினை எதற்காக போராடினாலும் கூட அவர்கள் எமதுநாட்டு மக்கள்; வேறும் யாரும் இல்லை. உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு யாரும் தடுக்க முடியாது. எனவே மக்களின் உரிமையை இந்த அரசாங்கம் நிலைநிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!