12 பிரிவுகள் உள்ளே, 4 பிரிவுகள் வெளியே!

நாட்டில் கொரோனா அச்சுறுத்தலையடுத்து கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் 12 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்பொத்த, கெஸ்பேவ கிழக்கு, மாகந்தன மேற்கு, குந்தன, பொல்ஹேன ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தின் கடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்தெனிய கிழக்கு, சூரியபாலவ தெற்கு மற்றும் வடக்கு, கீழ் கரகஹாமுல்ல வடக்கு, மேல் கரஹாமுல்ல வடக்கு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்புர கிராம சேவகர் பிரிவும், மத்துகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடியன மேற்கு கிராம சேவகர் பிரிவும் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன..

அதேவேளை, கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட 4 கிராம சேவகர் பிரிவுகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இவ்வாறு உடன் அமுலாகும் வகையில் களுத்துறை மாவட்டத்தின் 4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தின் இங்குருதலுவ, பெலவத்த கிழக்கு, மிரிஸ்வத்த மற்றும் பஹல ஹேவெஸ்ஸ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!