நேற்று 2,672 பேருக்கு கொரோனா! – ஒரே நாளில் உச்சத்தை எட்டியது.

நாட்டில் நேற்று 2,672 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில், 13 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரேநாள் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தைக் கடந்த முதல் சந்தர்ப்பம் இன்றாகும். இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 25ஆயிரத்து 906ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 801ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!