இளைஞர்களை குறிவைக்கும் கொரோனா 2ம் அலை: எச்சரிக்கை பதிவு!

கொரோனா இரண்டாம் அலையில் கவனமாக இருக்கும், 60களை விட, அலட்சியமாக இருக்கும், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் பலியாகின்றனர்.கடந்த முறை கொரோனா பரவல், 60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஆட்டிப் படைத்தது. நமக்கு வராது என்ற அலட்சியத்துடன் இளசுகள், ‘மாஸ்க்’ அணியாமல் நண்பர்கள், உறவினர்களுடன் சுற்றுகின்றனர்.

கொரோனா வந்தாலும், நோய் எதிர்ப்பு சக்தியால் வென்று விடலாம் என சளி, காய்ச்சல் பாதிப்பின், ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை பெறாமல் விடுகின்றனர். பாதிப்பு அதிகமாகி, மூச்சு திணறல் ஏற்படும் நிலையில், மருத்துவமனைக்கு வருகின்றனர்.ஏற்கனவே ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாத நிலையில், மூச்சுக் காற்றுக்காக வரிசையில் காத்து இருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்படுகிறது.

மற்றொரு தரப்பினர், கொரோனா வந்தால் சமுதாயத்தில் ஒதுக்கி விடுவர் என்ற பயத்தில், காய்ச்சலுக்கு வீட்டிலேயே கை வைத்தியம் செய்து, அறியாமையால் மாட்டிக் கொள்கின்றனர். இதனால், 20 – 45 வயதுக்கு உட்பட்டவர்கள் பலியாவது அதிகரிக்கிறது.’இது ஒதுக்கப்பட வேண்டிய நோய் இல்லை. மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை. அலட்சியம், அறியாமையை விடுத்து லேசான காய்ச்சல், உடல்வலி இருந்தாலே, ஆரம்பகட்ட சிகிச்சை பெறுவது அவசியம்’ என்பதே டாக்டர்களின் அறிவுரை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!