இராணுவ கண்காணிப்பு வளையத்துக்குள் வந்தது தர்மபுரம்!

கிளிநொச்சி – தர்மபுரம் கிராம சேவையாளர் பிரிவு விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலதிக தீர்மானம் நாளை எடுக்கப்படலாம் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய பிசிஆர் முடிவுகளின் அடிப்படையில் கிளிநொச்சி – தர்மபுரம் பிரிவில் 08 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். 7ஆம் யுனிற் பகுதியில் 07 பேரும், 5ஆம் யுனிற் பகுதியில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் பிசிஆர் பரிசோதனைகளின் பின்னரே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பகுதி சுகாதார தரப்பினர் மற்றும் இராணுவத்தினரின் விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாவட்ட கொவிட் செயலணி தெரிவித்துள்ளது.

மேலதிக விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எட்டப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!