தபால் விநியோகத்தில் தாமதம்

கொரோனா தொற்று பரவலுடன் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்கள் காரணமாக, தபால்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபால் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், தபால் போக்குவரத்தில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் சேவையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், கடமைக்கு சமூகமளிக்கும் தபால் ஊழியர்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமையின் கீழ் உயர்ந்தபட்ச சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பதில் தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க மேலும் கூறினார்.

இதனிடையே, கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் இதுவரை கிரேண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை மற்றும் ஹட்டன் தபால் அலுவலகங்கள் மற்றும் 40 உப தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!