தடுப்பூசிகள் விற்பனையாவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது

கொவிட் 19 தடுப்பூசிகள் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்களை, சுகாதார அமைச்சு மறுத்துள்ளது .

அத்துடன் அவ்வாறு விநியோகிக்கப்பட்டால், அவை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி கிடையாது எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கொவிட் 19 தடுப்பூசிகள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஏனைய தரப்பின் உதவியுடன் விற்பனை செய்யப்படுவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையிலேயே, குறித்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது

எனினும் பொய்யான குற்றச்சாட்டுக்களினால், தடுப்பூசிகள் தொடர்பில் பொதுமக்கள் நம்பிக்கையை இழப்பார்கள் என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது

மேலும், கொவிட் 19 தடுப்பூசிகள் என விற்பனை செய்யப்படும் தடுப்பூசிகளை, பணத்திற்காக பெற்றுக் கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுகாதார அமைச்சர் அல்லது அவரது குடும்பத்தினர் தடுப்பூசி மோசடி விவகாரங்களில், ஈடுபடவில்லை என சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!