பிரித்தானியாவில் இரவு நேர வேலைக்கு சென்ற மகன்: சிறிது நேரம் கழித்து தாயாருக்கு வந்த அதிர்ச்சி செய்தி!

பிரித்தானியாவில் இரவு நேர வேலைக்காக சென்ற மகன் குத்தி கொல்லப்பட்ட நிலையில், அவருடைய தாய் கண்ணீருடன் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். பிரித்தானியாவின் இங்கிலாந்தில் இருக்கும் Hendon-ல் காரில் தன்னுடைய நண்பர்களுக்காக காத்திருந்த போது, Asante Campbell என்ற நபர் அடையாளம் தெரியாத மர்ம நபரால் குத்தி கொல்லப்பட்டார்.

உயிரிழப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் தான் தன்னுடைய வருங்கால மனைவி மற்றும் தன்னுடைய குழந்தையிடம் சென்று வருகிறேன் என்று இரவு நேர வேலைக்கு சென்றுள்ளார்.

ஆனால், அவர் வீடு திரும்பவேயில்லை. இது குறித்து Asante Campbell தாயார் Angela Campbell s கூறுகையில், என மகன் இனி திரும்பி வரப்போவதில்லை என்பது புரிந்து கொள்ள முயற்சிக்க கடினமாக இருக்கிறது.

ஒவ்வொரு நாளும், கடப்பது, கடும் வலியை கொடுக்கிறது. அவனுடைய நினைவுகளை மறக்க முடியவில்லை. எந்த ஒரு தாய்க்கும் அவருடைய பிள்ளைகளை அடக்கம் செய்யும் நிலை வரக் கூடாது, குறிப்பாக இந்த காலக்கட்டத்தில் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

ரயில்வேயில் வேலை செய்து வரும் Asante Campbell கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ஆம் திகதி இரவு ஷிப்ட் வேலைக்காக சென்றுள்ளார். அப்போது தன்னுடைய 24 வயதான நண்பனை சந்திப்பதற்காக Bellevue Estate-க்கு சென்றுள்ளார்.

Asante Campbell அங்கு தன்னுடைய காரில் காத்துக் கொண்டிருந்த போது, அருகில் காரில் இருந்த சிலர் திடீரென்று அவர் காரை சுற்றி வளைத்து, குத்தியுள்ளனர். இதனால் உயிர் பிழைக்க Asante Campbell காரை எடுத்துக் கொண்டு வேகமாக சென்றுள்ளார்.

அப்போது கார் அங்கு தெருவில் வைக்கப்பட்டிருந்த கார் மீது விபத்துக்குள்ளாக, அங்கிருந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தெரிவித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவருடைய பிரதே பரிசோதனை அறிக்கையில், மார்பில் வெட்டப்பட்டதன் காரணமாக மரணம் ஏற்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, இதில் இரண்டு பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்,

அதே போன்று இந்த தாக்குதல் தொடர்பாக குற்றவாளிக்கு உதவியதற்காக 20 வயதான ஹபீத் உமர் என்பவர் கடந்த 21-ஆம் திகதி ஓல்ட் பெய்லியில் இருக்கும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு மூன்று ஆண்டுகள் மற்றும் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த மே 7-ஆம் திகதி குற்றத்தை ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!