கொரோனா உயிரிழப்பு: உலகளவில் இந்தியா 3-வது இடம்!

கொரோனா உயிரிழப்பில் 3 லட்சத்தை கடந்து அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை பாடாய்படுத்தி விட்டது. இப்போது நிலைமை ஓரளவு பரவாயில்லை. ஆனால் சில வாரங்களுக்கு முன்பு தினமும் அதிகளவு பாதிப்புகள், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கிடைக்காமல் , படுக்கைகள் கிடைக்காமல் பலர் உயிரிழப்பு என்று மோசமான நிலையில் இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 240,842 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 3,741 உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

இதன் மூலம் இந்தியா கொரோனா உயிரிழப்பில் 3 லட்சத்தை கடந்து அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3,03,751 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்கா 5,89,703 உயிரிழப்புகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. 4,48,208 இறப்புகளுடன் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

உலகம் முழுவதும் படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு – 14.85 கோடி பேர் மீண்டனர்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா 33,892,001 எண்ணிக்கையை பெற்று முதல் இடத்தில் உள்ளது. 26,751,681 பாதிப்புகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பெறுகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!