பயணக் கட்டுப்பாடு மே 7 வரை நீடிப்பு!- 3 நாட்கள் தளர்வு.

தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் 7ஆம் திகதி திங்கட்கிழமை வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அத்தியாவசியப் பொருள்களை கொள்வனவு செய்வதற்காக, மே- 25, மே 31 மற்றும் ஜூன் மாதம் 04ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் நாள்களில், அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்ய, அருகிலுள்ள கடைகளுக்கு சென்று திரும்பலாம் என்பதுடன், வாகன போக்குவரத்தை மட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

1. பயணக்கட்டுப்பாடுகள் ஜூன் 7 வரை நீடிக்கப்பட்டன.

2. பயணக்கட்டுப்பாடுகள், மே. 25, மே.31 ஆம் திகதிகளிலும், ஜூன் 04 ஆம் திகதியும் காலை 04 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் தளர்த்தப்படும்.

3. கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது பல்பொருள் அங்காடிகள், மளிகைக் கடைகள், பேக்கரிகள், பழம் மற்றும் காய்கறி கடைகள், மீன் மற்றும் இறைச்சி கடைகள் மற்றும் மருந்தகங்கள் மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

4. பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது மதுபானக் கடைகள் மூடப்படும்.

5. பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும்போது அத்தியாவசியப் பொருள்களை கொள்வனவு செய்ய, ஒரு வீட்டிலிருந்து ஒருவரை வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர்.

6. பொதுமக்கள் தங்கள் குடியிருப்புக்கு மிக அருகில் உள்ள கடைகளில் பொருள்களை கொள்வனவு செய்யலாம்.

7. உணவு, காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்கும் லொரிகள், பயணக் கட்டுப்பாடுகளின் போதும் அனுமதிக்கப்படும்.

8. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட காலகட்டத்தில் பொதுப் போக்குவரத்துகள் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படும்.

9. அத்தியாவசிய சேவைகள் மற்றும் விநியோக சேவைகள் மட்டுமே கட்டுப்பாடுகளின் போது செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

10. வீட்டிலிருந்து வெளியேறுவது முதல், சுகாதார வழிகாட்டுதல்களை கடுமையாக கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

11. பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது தேசிய அடையாள அட்டை (தே.அ.அ) இறுதி இலக்க முறைமை நடைமுறைக்கு வராது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!