மேலும் 38 பேர் பலி! – 2845 பேருக்கு வைரஸ் தொற்று.

நாட்டில் மேலும் 38 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 363ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, நாட்டில் நேற்றுமட்டும் 2 845 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 77ஆயிரத்து 706ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!