அத்தியாவசிய சேவைகள் தொடர்பிலான வர்த்தமானிக்கு எதிர்ப்பு

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு, ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் நிலையம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது

அரச ஊழியர்கள் தமது கடமைகளை மேற்கொள்வதற்காக சில கோரிக்கைகளை முன்வைத்துள்ள வேளையில், அரசாங்கம் அதனைப் புறக்கணித்துள்ளதாக குறித்த நிலையத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

அத்துடன், மேலும் பல அரச சேவையாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவை எனக்கூறி அரச பணியாளர்களை, அரசாங்கம் சேவைக்கு அழைத்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டுகின்றார்.

மேலும், இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபம் இதுவரை செயற்படுத்தப்படவில்லை எனவும் ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் நிலையத்தின் செயலாளர் செயலாளர் தம்மிக்க முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!