அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார் பெசில்

வெளிநாடு சென்றிருந்த ஜனாதிபதி செயணியின் தலைவர் பெசில் ராஜபக்‌ஷ நாடுதிரும்பியுள்ளார்

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ இன்று முற்பகல் 8.30 அளவில் நாடுதிரும்பியுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த விசேட விமானமூடாக பெசில் ராஜபக்‌ஷ மற்றும் அவரது பாரியார். உட்பட அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோர் இவ்வாறு நாடுதிரும்பியுள்ளனர்

ஜனாதிபதி செயணியின் தலைவர் பெசில் ராஜபக்‌ஷ பிரத்தியேக விஜயம் மேற்கொண்டு கடந்த மே மாதம் 12 ஆம் திகதி அமெரிக்கா பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!