ரணிலும் சஜித்தும் இணைந்து செயற்பட வேண்டும்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமாயின் , இருவரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் எனவும் நவீன் திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை பிளவுபட்டு செயற்படுவதனால் ராஜபக்ஸ தரப்பினருக்கு எதிராக ஒன்றிணைய முடியாத நிலை காணப்படுவதாகவும் முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், நடப்பு அரசாங்கத்தில் மாற்றத்தினை எதிர்பார்க்கும் அரச தரப்பு உறுப்பினர்கள் தம்முடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசாங்கத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ திருப்தியற்ற நிலையில் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிளவுபடுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!