ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்துள்ள ஹிருணிக்கா பிரேமசந்திர..!

ஆயுள் தண்டனை கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டமையானது சட்டத்துறைக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்தர ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம் ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பௌத்த தர்மத்திற்கு அமைவாக துமிந்த சில்வாவிற்கான பொது மன்னிப்பினை ஏற்றுக்கொண்டாலும், நாட்டின் நீதித்துறையை காப்பாற்ற வேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பு எனவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரே நாடு ஒரே நீதி என்ற தொனிப்பொருளில் கடந்த ஜனாதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ள ஜனாதிபதி, குற்றவாளிகளை விடுவிக்க முடியுமாயின் சட்டம், நீதிபதிகள் மற்றும் சிறைச்சாலைகள் ஆகிவற்றின் அவசியம் தொடர்பிலும் ஹிருணிக்கா பிரேமசந்தர கேள்வி எழுப்பியுள்ளார்

இதேவேளை துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு விடுதலைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும் தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அரசாங்கம் ஒன்றின் தன்னிச்சையான தீர்மானம் மற்றும் நாட்டின் சட்டத்தின் பலவீனத்தமையை எடுத்துகாட்டுவாகவும் இந்த விடயம்

காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!