முத்தக்காட்சி எப்படி வெளியானது? – விசாரணை மேற்கொள்ள பிரதமர் ஜோன்சனை அமைச்சர்கள் வலியுறுத்தல்!

பிரித்தானியாவின் சுகாதார செயலாளராக இருந்த மேட் ஹான்ஹாக் தன்னுடைய பெண் உதவியாளருக்கு முத்தமிடும் புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அது எப்படி ஊடகத்தில் வெளியானது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகிறது. பிரித்தானியாவின் சுகாதார செயலாளராக இருந்த மேட் ஹான்ஹாக், தனக்கு கீழ் பணியாற்றும் சக பெண் பணியாளருக்கு முத்தமிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை பிரபல ஆங்கில ஊடகமான தி சன் வெளியிட்டது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸின் முதல் அலை பிரிட்டனை கடுமையாகத் தாக்கி பலர் உயிரிழந்தனர். அப்போது ஊரடங்கு மற்றும் சமூக விலகலை கடைபிடிக்க போரிஸ் ஜான்சன் அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறுவோருக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் சமூக விலகலைப் பின்பற்றாமல் சுகாதாரத்துறை அமைச்சரே தனக்கி கீழ் வேலை பார்க்கும் பெண்ணிடம் இவ்வாறு நடந்து கொண்டது,

சட்டத்தை மீறும் செயல் என்று கூறி அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, தான் செய்த தவறுக்காகவும், சமூக விலகலை கடைபிடிக்காமல் இருந்ததற்காகவும் மேட் ஹான்காக் மன்னிப்பு கேட்டு நேற்று பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது, மேட் ஹேன்காக் சக பெண் பணியாளருக்கு அவர் உதட்டில் முத்தமிட்டதை யார் அலுவலகத்துக்குள் நுழைந்து புகைப்படம் எடுத்தது என்பது தொடர்பான விசாரணை மேற்கொள்ள பிரதமர் போரிஸ் ஜோன்சனை அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!