விற்பனைக்கு வந்த கொரோனா தடுப்பு மருந்து: நல்ல பலன் அளிப்பதாக தகவல்!

கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ‘2 – டிஜி’ மருந்து சந்தையில் விற்பனைக்கு வந்தது. இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம், ‘2 – டிஜி’ எனப்படும் கொரோனா சிகிச்சை மருந்தை கண்டுபிடித்துள்ளது. கொரோனா வைரசால் மிதமான மற்றும் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்து நல்ல பலன் அளிப்பது தெரியவந்துள்ளது.

இந்த மருந்தை தயாரிக்கும் டாக்டர் ரெட்டீஸ் லேபாரேட்டரீஸ் நிறுவனத்திற்கு, அவசரகால பயன்பாட்டிற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 2 – டிஜி மருந்து சந்தையில் விற்பனைக்கு வந்தது.

இந்த மருந்து 99.5 சதவீதம் துாய்மையானது, பொடி வடிவிலான இந்த மருந்து , ஒரு பாக்கெட் விலை , 999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் .

முதற்கட்டமாக அனைத்து பெருநகரம் மற்றும் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் இந்த மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இதைத் தொடர்ந்து , நாடு முழுதும் மருந்து விற்பனை விரிவுபடுத்தப்படும் . மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இந்த மருந்தைவிற்பனை செய்யக் கூடாது .

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!