சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படவுள்ள நாடாளுமன்ற மோதல் குறித்த அறிக்கை

2021 ஏப்ரல் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடந்த மோதல் குறித்த அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் அடுத்த வாரம் ஒப்படைக்கப்படும் என தெரியவருகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற முரண்பாடுகளை அடுத்து நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மோதிக் கொண்டனர்.

இதனையடுத்து நாடாளுமன்ற அறை மற்றும் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு நேற்று முன்தினம் கூடி அதன் அறிக்கையை அடுத்த வாரம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்க முடிவு செய்தது.

இந்த குழு துணை சபாநாயகர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டியின் தலைமையில் கூடியது என்று நாடாளுமன்ற ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அமைச்சர்கள் சமல் ராஜபக்ஷ, கெஹெலிய ரம்புக்வெல்ல, ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுர பிரியதர்ஷன யாபா, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.

இந்த குழு 2021, ஏப்ரல் 23 அன்று சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!