திருமண நிகழ்வில் பங்கேற்ற 20 பேர் தனிமைப்படுத்தல்

பாணந்துறை பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற 20 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்

பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொதுசுகாதார வழங்கிய தகவலின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் நேற்று குறித்த அனைவரும் அடையாளங் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

இதற்கமைய திருமண நிகழ்வில் பங்கேற்ற 12 ஆண்கள் 8 பெண்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!