அரச வைத்தியர்கள் ஒய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்பு – வர்த்தமானி வெளியானது

அரச வைத்தியர்கள் ஒய்வுபெறும் வயதெல்லை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி அரச வைத்தியர் ஒருவர் ஓய்வு பெறும் வயதெல்லை 63 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை அரச வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையினை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருற்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!