“தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே ரயிலில் பயணிக்க முடியும்” – தென்மேற்கு ரயில்வே அதிரடி!

கொரோனா பரவலின் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்துள்ளதால் பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இதன்படி, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பேருந்து மற்றும் ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கும் மாநில அரசுகள் அனுமதி வழங்கி வருகின்றன.

இந்நிலையில், தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே ரயிலில் பயணிக்க முடியும் என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தென்மேற்கு ரயில்வே, ‘மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவிற்கு ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கட்டாயம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

ஒருவேளை தடுப்பூசி செலுத்தாதவர்கள் 72 மணி நேரத்திற்கு மிகாமல் ஆர்.டி.-பி.சி.ஆர்., பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்’ எனத் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!