நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்

நிதி வெளிபாய்ச்சல்களை மட்டுப்படுத்தும் வகையில் நிதி அமைச்சர் பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் அவர்களின் தாயகத்திற்கு புலம்பெயர் கொடுப்பனவின் கீழ் நிதிகளை அனுப்புகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கான ஒரு மாற்றுவழியாக இந்த திட்டம் கையாளப்படுகின்றது.

ஆகையினால் வெளிநாட்டவர்கள் அவர்களின் நாடுகளுக்கு பணத்தினை அனுப்புவதற்கு வரையறை விதிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து நாடுகளிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளமையினால் இலங்கைக்கான வெளிநாட்டு நிதியுதவிகள் கிடைக்கவில்லை.

அது மாத்திரமின்றி ஏற்றுமதி பொருட்களுக்கான கேள்விகளும் சர்வதேச சந்தையில் குறைவடைந்துள்ளமையினால் வெளிநாட்டு நிதி எமது நாட்டுக்கு கிடைக்கவில்லை.

கட்டாயம் இறக்குமதிய செய்ய வேண்டிய பொருட்களுக்கு வெளிநாட்டு நாணய அலகினை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்.

மேற்குறிப்பிட்ட காரணங்கள் உள்ளிட்ட மேலும் சில காரணங்களால் இலங்கையில் வெளிநாட்டு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!