ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு எம்.ஆர்.ஐ பரிசோதனை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு எம்.ஆர்.ஐ பரிசோதனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அவர் அண்மையில் முழங்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையிலேயே அவருக்கு விரைவில் எம்.ஆர்.ஐ பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் அவர் தங்கவைக்கப்பட்டுள்ள ,வைத்தியசாலையில் 24 மணிநேர பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!