மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு ஜூலை 19 வரை நீடிப்பு!

மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள் ஜூலை 19 வரை நீடிக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.கொரோனா தொற்று காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதேவேளை ஜூலை 5 முதல் 14 நாட்களுக்கு மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் அமுல் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பொலிஸ், இராணுவம், சுகாதாரம், மின்சாரம், பெட்ரோலியம், நீர் வழங்கல், ஊடகங்கள் மற்றும் தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும்பவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாகாணங்களுக்கு இடையே பயணிக்க அனுமதி வழங்கப்படும்.

அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் இந்த புதிய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார். ஜூலை 5 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!