கொழும்பின் இரு முக்கிய கட்சிகளும் சமாதான முயற்சிகளுக்கு ஒத்துழைக்கவில்லை!

சந்திரிகா குமாரதுங்க சமாதான முயற்சிகளை முன்னெடுக்க விரும்பிய வேளை, ரணில் அதனை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என அஞ்சியதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பின் இரு முக்கிய கட்சிகளும் அவ்வேளை சமாதான முயற்சிகள் விடயத்தில் ஒத்துழைத்து செயற்படவில்லை. அவர்கள் நாடாளுமன்றத்தில் – அரசாங்கத்தில் ஒரே பதவிக்காக போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். பொதுவான நலனிற்காக இலங்கையின் முக்கிய இரு கட்சிகளும் இணைந்து செயற்பட தயாராக இல்லாதமையே சமாதான நடவடிக்கைகளை மிகவும் கடினமானதாக மாற்றியது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதான உடன்படிக்கையொன்றை எட்டுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி முயற்சிகளை மேற்கொண்டால் அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதனை ஏற்றுக்கொள்ளாது அதனை பலவீனப்படுத்தும் என அச்சமடைந்தார்கள்.

அதேஅச்சம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியிலும் காணப்பட்டது. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சமாதான முயற்சிகளை முன்னெடுக்க விரும்பிய வேளை ரணில் அதனை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என அஞ்சினார்.

இது சமாதான முயற்சிகளை மேலும் கடினமானதாக்கியது. இரு கட்சிகளும் விடுதலைப் புலிகளுடன் சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்காக தங்கள் சக்தியை செலவிடுவதை விட தங்களிற்கு எதிரான மோதலிற்கு அதிக சக்தியை செலவிட்டதாக தான் கருதியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!