அமைதிக்கு மத்தியில் புதிய திட்டத்தைத் தொடங்கிய அமைச்சர் விமல்!

கொழும்பு அரசியல் பரபரப்படைந்துள்ள நிலையில், அமைச்சர் விமல் வீரவன்ச அமைதிக்கு மத்தியில் தனது அமைச்சின் மூலம் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக அறியப்படுகிறது.

இதன்படி, உயர்தர நச்சுத்தன்மையற்ற தேங்காய் எண்ணெயை மக்களுக்கு சலுகை விலையில் வழங்கும் திட்டத்தை அமைச்சர் வீரவன்ச முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு சிங்கள ஊகடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மானிய விலையில் தேங்காய் எண்ணெயை இந்த மாத இறுதிக்குள் சந்தைக்கு விடுவிப்பதே அமைச்சரின் நோக்கமாகும்.

நச்சுத்தன்மையற்ற தேங்காய் எண்ணெயை உள்நாட்டில் உற்பத்தி செய்ய உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் மூலப்பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைத்தொழில் அமைச்சின் கீழ் இருக்கும் பிபிசி லங்காவின் தலையீட்டின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன் முன்னேற்றத்தை மறுஆய்வு செய்வதற்கான கலந்துரையாடல் சில நாட்களுக்கு முன்பு அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது.

தேங்காய் எண்ணெய்க்கு சந்தையில் வழங்கக்கூடிய குறைந்தபட்ச விலைகள் குறித்து அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார்.

தற்போது சந்தையில் இருக்கும் விலையை விட மிகக் குறைந்த விலையில் தேங்காய் எண்ணெயை வழங்குவதே அமைச்சரின் நோக்கம். இ

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!