லம்ப்டா இலங்கையிலும் பரவும் அபாயம்!

கொரோனா வைரஸ் பிறழ்வான லம்ப்டா இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லம்ப்டா வைரஸ் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு மிகுந்த அவதானத்துடன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த வைரஸ் பிறழ்விற்கான மாதிரிகளை தொடர்ந்தும் பரிசோதித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு நாட்டிற்குள் பரவாதிருப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!