தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள கட்டியெழுப்ப முயற்சித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, மீள கட்டியெழுப்ப முயற்சித்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த நபர், 2019 ஆம் ஆண்டு முதல் கட்டார் நாட்டில் தலைமறைவாகி இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சர்வதேச பொலிஸாரின் ஒத்திழைப்புடன், குறித்த நபர், கட்டார் அரசாங்கத்தினால் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சந்தேகநபர் 14 நாட்கள் முள்ளியவலை தனிமைபடுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவு செய்துள்ள நிலையில், நேற்றைய தினம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, குறித்த நபர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டு, தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!