அவுஸ்திரேலியாவில் மாபெரும் சாதனையை படைத்த இந்தியர்!

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற மாஸ்டட் செப் நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்டின் நரயன் வெற்றி பெற்றுள்ளதால், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. உலக சமையல் ரசிகர்களால், அதிகம் பார்க்கப்படும், நிகழ்ச்சிகளில் அவுஸ்திரேலியாவில் நடக்கும் MasterChef trophy நிகழ்ச்சியும் ஒன்று. மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சியின் 13-வது சீசனின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த Justin Narayan மற்றும் வங்கதேச வம்சாவளியைச் சேர்ந்த Kishwar Chowdhury, அவுஸ்திரேலியாவின் New South Wales-ஐ சேர்ந்த Pete Campbell ஆகியோர் தகுதி பெற்றனர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் Justin Narayan வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 27 வயது மதிக்கத்தக்க Justin Narayan, MasterChef trophy 13-வது சாம்பியன் பட்டத்தை வென்றார்.

அதன் படி Justin Narayan-க்கு முதல் பரிசாக 1.86 கோடி பரிசாக கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு இணையதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!