பசிலுக்காக பதவி துறந்தவருக்கு அவுஸ்திரேலியாவிற்கான உயர்ஸ்தானிகர் பதவி

தமக்கு அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவி அறிவிக்கப்பட்ட போதும் அதனை தாம் ஏற்கவில்லை என பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த கெட்டகொட தெரிவித்து இருக்கிறார்.

பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வருவதற்காக ஆளுங்கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினரான ஜெயந்த கெட்டகொட அண்மையில் தமது நாடாளுமன்ற பதவியை விட்டு விலகினார்.

இதனையடுத்து பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று, பின்னர் நிதி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் பசில் ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்ற பதவியை விட்டு கொடுத்தமைக்காக தமக்கு அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் பதவி வழங்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்து இருந்தது.

அதனை விட வேறு சில வாய்ப்புகளும் தமக்கு வழங்கப்பட்டன என்றாலும் அவற்றை தாம் நிராகரித்து விட்டதாக ஜெயந்த கெட்டகொட குறிப்பிட்டு இருக்கிறார்.

தம்மை பொறுத்த வரையில் நாட்டுக்கு சிறந்த ஒருவர் வரவேண்டும் என்பதை கருத்திற் கொண்டே தாம் செயற்பட்டதாகவும் அதற்காக மாற்று வாய்ப்புக்களை தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தொடர்ந்தும் பசில் ராஜபக்ஷவின் சேவைக்கு தாம் துணையாக இருக்க போவதாகவும் ஜெயந்த கெட்டகொட குறிப்பிட்டு இருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!