கொழும்பில் அதிகளவில் டெல்டா தொற்றாளர்கள்

கொழும்பு மாவட்டத்தில் கோவிட் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் அதிக வீரியம் கொண்ட டெல்டா வைரஸ் தொற்றியவர்கள் என்பது முக்கியமானது.

இதனால், கொழும்பு நகர எல்லைக்குள் டெல்டா வைரஸ் தொற்றி பலர் இருக்கலாம் என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளரான சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள தொற்றாளர்களில் 20 வீதமானவர்கள் டெல்டா திரிபு தொற்றுக்கு உள்ளானவர்களாக இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக மக்கள் இது குறித்து கூடிய கவனத்தை செலுத்த வெண்டும். சுகாதார வழிக்காட்டல்களை சரியான முறையில் பின்பற்ற வேண்டும் எனவும் ஹேமாந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!