பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்!

ஆசிரியர்கள் மற்றும் கல்வி சார் ஊழியர்கள் அனைவருக்கும் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் பாடசாலைகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றில் இன்று இதனை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசியை வழங்குவதற்கு உலகில் பல நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

ஆனால் நாட்டில் அரசாங்கம் இதுதொடர்பில் எந்தவித கொள்கையுமின்றி செயல்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பரேமதாச நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதில் வழங்கிய அவர்,

“தடுப்பூசி வழங்குவதில் உயர் தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கு இதில் முக்கியத்துவம் வழங்கப்படும். பின்னர் கட்டம் கட்டமாக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தற்போது இணைய வழி கல்வியில் உள்ளடக்கப்படாத இயற்பியல் மற்றும் உயிரியல் போன்ற பாடங்களில் செயல் முறைகள் காணொளி மூலம் காட்சிப்படுத்தி இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் தக்சலா தொலைக்காட்சி ஊடாக மாணவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!