சீன அரசு எடுத்த அதிரடி முடிவு: உளவுத்துறை அனுப்பிய முக்கிய தகவல்!

திபெத் பகுதியில் குடும்பத்தினரில், இளைஞர் ஒருவர் கண்டிப்பாக இராணுவத்தில் சேர வேண்டும் என்று சீனா கட்டாயப்படுத்தி வருகிறது. இந்தியா-சீனாவிற்கு இடையே கடந்த 1962-ஆம் ஆண்டு நடந்த போருக்கு பின், இந்திய அரசு ,சிறப்பு முன்னணி படை என்ற பிரிவை உருவாக்கியது. மத்திய கேபினட் செயலகத்தின் கீழ் உள்ள இப்பிரிவில், இந்தியாவில் வசிக்கும் பாரம்பரிய திபெத்தியர்கள் மற்றும் தலாய்லாமாவின் தலைமையை ஏற்ற திபெத் இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

அவர்களுக்கு அமெரிக்க உளவுத் துறையும், இந்திய இராணுவமும் பயிற்சி அளித்தன. இவர்களுக்கு மலைப் பிரதேச வழிகள் அத்துப்படி என்பதால், இந்திய எல்லைகளில் இராணுவத்திற்கு உதவியாக உள்ளனர்.

கடந்த ஆண்டு கிழக்கு லடாக்கில் சீனா அத்துமீறிய போது, மோக்பரி, பிளாக் டாப் உள்ளிட்ட மலைச் சிகரங்களை கைப்பற்ற, இந்திய ராணுவத்திற்கு சிறப்பு முன்னணி படை உதவிகரமாக இருந்தது.

இது, சீனர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. இதன் காரணமாக, இந்தியாவை பின்பற்றி சீன இராணுவமும், எல்லையோர பணிகளுக்காக திபெத்தியர்களை பணியமர்த்தத் துவங்கி உள்ளதாக கூறபட்டது.

இந்நிலையில், திபெத் பகுதியில் குடும்பத்தினரில், இளைஞர் ஒருவர் கண்டிப்பாக இராணுவத்தில் சேர வேண்டும் என்று சீனா கட்டாயப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், உளவுத்துறையினரின் அறிக்கைப்படி, சீன இராணுவம் மற்றும் உள்ளூர் இராணுவத்தில், திபெத்திய இளைஞர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

அவர்களை எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த சீனா திட்டமிட்டு உள்ளது. திபெத்திய தன்னாட்சி பகுதியில் நடத்தப்படும் இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம்களில், திபெத்திய குடும்பத்தில் ஒரு இளைஞர் இராணுவத்தில் சேர வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

திபெத் தன்னாட்சி பகுதியில் உள்ள பல்வேறு பல்கலைகழகங்களில் படிக்கும் 20 இளைஞர்கள் இராணுவ அகாடமியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் கிராமத்தினர், எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியை பற்றி அறிந்தவர்கள், இராணுவத்தின் ரோந்து பணிக்கு உதவும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளதாக உளவுத்துறையினர் கூறி உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!